சவூதி சவூதி செய்தி சவூதி தமிழ் செய்திகள் சவூதி வீசா சவூதி வேலை சவூதி கேள்வி விடை சவூதியில் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி - 2 தினங்களில் குவிந்த 20 கோடி சவூதியில் உரிமம் இல்லாத டாக்ஸிகள் - எச்சரிக்கை சவுதி அரேபியாவின் விமான நிலையங்களில் சவுதி பொது போக்குவரத்து ஆணையம் நடத்திய பரிசோதனைகளின் போது, உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் டாக்ஸிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய டாக்ஸிகள் உரிமம் பெற்றுள்ளதை உறுதி படுத்துவதன் மூலம், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவை தரம் உயர்வு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு செயல்பட்ட டாக்ஸிகள் மீது, ரமலான் மாதத்தில் மட்டும் 2194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 126 பேர் மீண்டும் இதே வழக்கில் பிடிபட்டுள்ளனர். இவ்வாறான வழக்குகளுக்கு 5000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். வாகனமும் பறிமுதல் செய்யப்படும். எனவே, தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.