சொற்றுணை வேதியன் | நமச்சிவாயப் பத்து சொற்றுணை வேதியன் பதிக எண்: 4.11 கடலில் அருளியது பண்: காந்தாரபஞ்சமம் பின்னணி தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.. இதனை சேக்கிழார் குறிக்கும் பெரியபுராண பாடல்கள் இங்கே இந்தப் பதிகத்தினை நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை நாம் பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம்கொடுக்கப்பட்டுள்ளன. Lyrics Meanings: https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/4th-thirumurai/4-11-chotrunai-vaethiyan/ திருச்சிற்றம்பலம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUSICWORLD/videos Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6Jz0LkMNtECz Follow us on Instagram: https://www.instagram.com/__keerthana_vengatesan/ Follow us on Facebook Page: https://www.facebook.com/KeerthanaVengatesan1

#Keerthana#keerthanamusicworld#keerthanavengatesan#carnaticmusic#carnatic#indiansotrunai vedhiyanசொற்றுணை வேதியன்சொற்றுணை வேதியன் சோதி வானவன்#thevaramtamillyrics#thevaramlyrics#thevarambook#thevaramlyricsinenglish#thevaramtamilpdf#thevaramwrittenby#thevaramsongslist#thevaramsongs#thevaramsong#appar#thiruchitrambalam#thirunavukkarasarthevaram#thirunavukkarasar#thirunavukarasarpathigamஅப்பர் தேவாரம்நமச்சிவாயப் பதிகம்