#Partnership மும்பையின் முக்கிய புள்ளி மீது பாய்ந்த குண்டுகள் துணிகர சம்பவம் பின்னணி என்ன? மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். வயது 66. அஜித் பவார் தலைமயிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். மும்பையின் பாந்த்ரா கிழக்கு எம்எல்ஏவாக இருக்கும் அவரது மகன் ஜீஷனின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணி அளவில் வெளியே வந்தார். காரில் ஏறிய அவரை சுற்றி வளைத்த 3 பேர் மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். தசரா விழாவில் பட்டாசு வெடித்த சமயத்தை பயன்படுத்தி இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர். வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்து சித்திக் சரிந்தார். அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சித்திக் இறந்தார். இரண்டு நபர்களை போலீசார் கைது செய்த நிலையில், மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார். முதல் கட்ட விசாரணையில் பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 மாதங்கள் வரை சித்திக்கை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த சம்பவம் நடந்துள்ளதாக மும்பை போலீசார் கூறி உள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மும்பையில் உள்ள பிரபல ரவுடிகளில் ஒருவன். ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் இவன் தான். இப்போது சித்திக் கொலை வழக்கிலும் இவர் பெயர் அடிபடுகிறது. கொலைக்கான முழு காரணம் இன்னும் வெளியாகவில்லை. பின்னணி குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.#BabaSiddique #Maharashtra #Political #SalmanKhan #gunshot #MumbaiPolice

BabaSiddiqueMaharashtraMumbaiPolicePoliticalSalmanKhangunshot